வைரல் வீடியோ

X
முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப் பகுதியில் உள்ள வெவ்வேறு சாலை ஓரங்களில் சாலையைக் கடந்த புலிகள் ..கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மசினகுடியில் இருந்து மாயார் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களது வாகனத்தில் சென்றபோது புலி ஒன்று பிரம்மாண்டமாக சாலை ஓரத்தில் நடந்த சென்றும் சாலையை கடந்து சென்ற காட்சியை வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இதேபோல் மாலை 5.45 மணியளவில் மசனகுடியில் இருந்து சிங்கார செல்லக்கூடிய சாலையில் சுற்றுலா பயணிகள் சென்றபோது அங்கும் ஒரு புலி சுற்றுலா பயணிகளுக்கு போஸ் கொடுத்தவாறு சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்ட ரசித்து நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் புலிகள் சாலை ஓரங்களில் அவ்வப்போது தென்படுவது அதிகரித்துள்ள நிலையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர்
Next Story

