போச்சம்பள்ளி அருகே கொதிக்கும் எண்ணையில் அதிரசத்தை எடுத்த பூசாரி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சென்னம்மாள் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று கோவில் பூசாரி காளியப்பன் என்பவர் அருள் வந்து அடுப்பில் இருந்த கடாயில் கொதிக்கும் எண்ணெயில் அதிரசத்தை வெரும் கையால் எடுத்து சாமிக்கு படையல் இட்டார். தொடர்ந்து பக்தர்களும் வெறும் கையால் அதிரசங்களை எடுத்தனர். நேர்த்தி கடன் செலுத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

