மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் செல்போன் திருடியவர் பொதுமக்கள் கையில் சிக்கினார் !

X
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் இருந்து ஏழு செல்போன்களை திருடிய மர்ம நபர் பொதுமக்கள் கையில் சிக்கினார். நீலகிரி மாவட்டம் நோக்கி விடுமுறை காரணமாக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட அவர் பலரிடமிருந்து செல்போன்களை பறித்தார். இதனை கவனித்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
Next Story

