பவானி ஆற்றில் மூழ்கி கோவை இளைஞர்கள் உயிரிழப்பு !

X
கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி ராஜ் (25), பிரதாப் ராஜ் (25) ஆகியோர், கடந்த 15ஆம் தேதி நண்பர்களுடன் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகிலுள்ள நரசிமுக்கு பகுதியில் உள்ள பவானி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இருவரும் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போனனர். நண்பர்கள் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற தேடுதலில், நேற்று இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக அட்டப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

