இந்தி திணிப்பை இறுதி மூச்சுவரை எதிர்ப்பேன் – வைகோ உறுதி !

கோவை, சூலூர் அண்ணா சீரணி கலையரங்கில் மதிமுக சார்பில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.
கோவை, சூலூர் அண்ணா சீரணி கலையரங்கில் மதிமுக சார்பில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார். கல்லூரி காலத்திலிருந்தே இந்தி திணிப்புக்கு எதிராக களமிறங்கி சிறை சென்றவன் நான். 30 ஆண்டுகள் திமுகவிற்காகவும், 31 ஆண்டுகள் மதிமுகவிற்காகவும் உழைத்துள்ளேன். உயிர் உள்ளவரை தமிழுக்கும், திராவிடத்துக்கும் குரல் கொடுப்பேன் என்று அவர் உணர்ச்சி வசப்பட்டு கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் அகற்றப்பட்ட ராஜராஜ சோழன் – ராஜேந்திர சோழன் படத்தை மீண்டும் வைக்க பிரதமர் மோடியால் முடியுமா என கேள்வி எழுப்பினார். அம்பேத்கர் படத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வர பங்காற்றியவன் நான். சோழர்களின் பெருமை படம் மீண்டும் வைக்கப்பட வேண்டும் என்றார். மதிமுகவுக்கு அதிகார ஆசை இல்லை. அமைச்சர் பதவி கொடுத்தபோது அதை மறுத்து தொண்டர்களுக்காக பயன்படுத்தினேன். கட்சியைவிட்டு சென்றவர்களைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழட்டும் என்றும் வைகோ தெரிவித்தார். அவரது உரையில் இடையே கண்கலங்கியதால், கட்சியினரிடையே சோக நிலை நிலவியது.
Next Story