கோவை: மருந்து விற்பனை பிரதிநிதிகள் போராட்டம் !

குறைந்தபட்ச ஊதியம் கோரி மருந்து விற்பனை பிரதிநிதிகள் போராட்டம்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,910 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் கோவை மாவட்ட குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் எஸ்பிஇ ஆக்ட் 1976 சட்டத்தை பாதுகாக்க வேண்டும், புதிய தொழிலாளர் நலச்சட்டங்களை திரும்ப பெற வேண்டும், எட்டு மணி நேர வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாநில குழு உறுப்பினர் ஏ. முகமது ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார். அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளன மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. வினோஜ் ரமானுஜம், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஆர். வேல்சாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
Next Story