சென்னையில் தூய்மை பணியாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற கோரிக்கை – கோவையில் சிஐடியு போராட்டம் !

சிஐடியு தலைமையில் கோவையில் ஊரக வளர்ச்சி ஊழியர்கள் போராட்டம்.
சென்னையில் போராடிய தூய்மை பணியாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேல்சாமி, செயலாளர் ரத்தினகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து, வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது, பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் டாஸ்மாக், மின், இன்ஜினியரிங் உள்ளிட்ட சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
Next Story