வீணை தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

X
60 வயதுக்கு மேற்பட்ட வீணை செய்யும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வீணை தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் மனு அளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தூறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த கொலை தீர்ப்ப கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை விகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது வீணை தொழிலாளர்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவித்துள்ளதாவது: 60வது வயதுக்கு மேற்பட்ட வீணை செய்யும்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் வீட்டில் வைத்து வீணை செய்து வருகிறோம். வீணையை கைகளால் மட்டுமே செய்ய முடியும் எந்த வித இயந்திரமும் பயன்படுத்த இயலாது. எங்களது மின்சார இணைப்பு ஒருமுனை மின்சாரம் மட்டும்தான். மும்முனை மின்சாரம் கிடையாது. ஆனால் எங்களுக்கு வியாபார நிறுவனங்களுக்கு உள்ள மின் கட்டணம் போல் இரண்டு மடங்கு வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சாதாரண மின் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

