கோவில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு

X
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயில் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொறுத்த அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 19.06.25 அன்று பதாகைகள் ஏந்தி கோவிலை சுற்றி வந்து போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் சிசிடிவி கேமராக்களை அர்த்தமண்டபத்தில் பொருத்திவிட்டு ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனஇந்த சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்ட நிலையில் நான்கு நாட்கள்ஆன நிலையில் அர்ச்சகர்களிடம் நேற்று முதல் பேச்சுவார்த்தை நடத்தி எந்தப் பலனும் எட்டப்படாத நிலையில் இன்று காவல்துறை உதவியுடன் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன் சிசிடிவி பொருத்தும் பணியில் ஈடுபட்டார் இதற்கு அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஒரு வார காலம் தங்களுக்கு கால அவகாசம் தரும்படி கேட்டதாகவும் அதை நீங்கள் தரதர வேண்டும் எனவும் அர்ச்சகர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது அர்ச்சகர்களை வெளியே வரச் சொல்லிவிட்டு அர்த்தம் மண்டபத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் , ஆகம விதிகளுக்கு முரணாகவும் , ஆதிசைவ சிவாச்சாரியார்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்காமலும் , பக்தர்களின் மனம் புண்படும்படியாக கோயில் கருவறையின் அர்த்த மண்டபத்தில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு கோயில் அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆதிசைவ அர்ச்சகர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலை பொறுத்தவரை ஸ்தானீக பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் பரம்பரையாக வந்தவர்கள் தான் தற்போது பூஜைகளை செய்து வருகிறோம். சுமார் பத்து தலைமுறைகளாக நாங்கள் தெய்வப் பணி செய்து வருகிறோம். இதுவரை இல்லாத வகையில் ஒரு பெட்டிசனர் கேட்டுக் கொண்டுள்ளபடி கோயில் கருவறையில் உள்ள மரகத லிங்கத்தை பாதுகாக்க என கூறி அர்த்த மண்டபத்தில் ஆகம விதிகளுக்கு முரணாக கருவறையில் உள்ள சுவாமியை படம் பிடிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் கூட மகா மண்டபம், அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு மின் விளக்குகள் பொறுத்துவது, சிசிடிவி கேமராக்கள் பொறுத்துவதில்லை, பொறுத்தப்படவும் இல்லை. ஆனால் திருச்செங்கோடு மலைக் கோயிலில் மட்டும் ஆகம விதிகளை மீறி அர்த்தமண்டப பகுதிகளில் சிசிடிவி கேமரா பொறுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது எங்களையும், பக்தர்களையும் புண்படுத்தும் செயலாகும். ஆகவே அர்த்த மண்டபம்,கருவறை தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் சிசிடிவி கேமராக்களை பொறுத்த கேட்டும் அதிகாரிகள் எங்களை மிரட்டும் வகையில் அச்சுறுத்துகின்றனர். இதனை கண்டித்து 16.09.25 அன்று அடையாள போராட்டம் நடத்தியுள்ளோம்.ஆனாலும் இன்று எங்களை வெளியேற்றிவிட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இனி பக்தர்களும் நகரின் முக்கிய பிரமுகர்களும் ஆகம விதிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்கள் அதிகாரிகள் தரப்பில் இது குறித்து கேட்டபோது கோவில் ஆகம விதிகளுக்கு முரணாக எந்த செயலும் நடத்தப்படவில்லை நீதிமன்ற அறிவுறுத்தலின்படி சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது மூலவர் திருவுருவம் தெரியாதபடி கருவறையின் வாசல் மட்டுமே வெளியே தெரியும் படியும் யார் என்ன எடுத்துச் செல்கிறார்கள் கொண்டு வருகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக இது குறித்து அர்ச்சர்களிடம் பேசியும் அவர்கள் வேண்டுமென்றே ஒத்துழைக்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

