ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் போராட்டம்

X
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கு உரிய நிதி வழங்க வேண்டும் போதிய அவகாசம் கொடுத்து முகாம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் வட்டார கிளைகளில் மாநில தழுவிய அளவில்ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு மற்றும் கருப்பு பட்டை அணிந்து வெளிநடப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் திருச்செங்கோடு வட்டார கிளை செயலாளர்அருள்குமார் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் பிரபு சங்கர்,மற்றும் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரை யாற்றினர் வட்டார தணிக்கையாளர் வளர்மதி அனைவரையும் வரவேற்றார்ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாரத் தலைவர் மகபூப் பாஷா அனைவருக்கும் நன்றி கூறினார் போராட்டம் குறித்துசங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு சங்கர் கூறியதாவது தமிழ்நாட்டில் உள்ள கடை கோடி மக்களுக்கும் அரசு துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது கிராமப்புற பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை வழங்கிட வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து ஊராட்சிக்கு ஒன்று என்ற அடிப்படையில் முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களை நடத்துவதற்கு 18 கோடியை 69 லட்சம் ரூபாய் AGAMT (IEG) நிதி, ஊராட்சி ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற் கொள்ள அரசாணைவெளியிட்டு இருந்தாலும் AGAMT (IEG) நிதி,எந்த ஊராட்சிக்கு ஒதுக்கப்படவில்லை.உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் திருமண மண்டபங்களில் நடத்தப்படுவதாலும் திருமண மண்டபங்கள் இல்லாத இடங்களில் பந்தலமைத்து நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தும் நிலையில் திருமண மண்டபத்திற்கான வாடகை, பந்தல், மைக் செட்,மேஜை நாற்காலிகளுக்கான வாடகை,புகார்முக்கு வரும் அலுவலர்களுக்கான உணவு ஏற்பாடு,ஒரு லிட்டர் செலவினங்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படாத நிலையில்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள்என பலரும் முகாம் நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.எந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள்திட்ட இயக்குனர்கள் ஆய்வுக் கூட்டம் என்கிற பெயரில் விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். எனவே ஒரு முகாமிற்கும் மற்றொரு முகாமிற்கும் போதிய கால அவகாச இடைவெளி விட்டு நடத்த கோரியும் முகாம் நடத்துவதற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும்இன்று கருப்பு பட்டைய அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார்
Next Story

