மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியமைக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விருதுக்கு தேர்வு

X
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியமைக்காக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், சிறந்த மாவட்ட ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 2025-ம் ஆண்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கும் தமிழக அரசால் மாநில விருதுகள் வழங்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பெற்று தந்தமைக்காக, சிறந்த மாவட்ட ஆட்சியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியருக்கான இவ்விருது, சென்னையில் விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என அரசு செயலாளர் சோ.மதுமதி தெரிவித்துள்ளார்.
Next Story

