மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வாக்கு திருட்டு மூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

X
அருப்புக்கோட்டையில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வாக்கு திருட்டு மூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ் தலைமையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் கடைகள் பேருந்துகள் ஆட்டோக்களில் ஓட்டு திருட்டை நிறுத்து என் ஓட்டு என் அதிகாரம் என்ற போஸ்டரை ஒட்டி பாஜக அரசுக்கு எதிர்ப்பு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வாக்கு திருட்டு மூலம் ஜனநாயகத்தை படுகொலை செய்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ் தலைமையில், இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் சகாரிக்கா ராவ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விருதுநகர் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜோதிமணி, நகர் காங்கிரஸ் தலைவர் லட்சுமணன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானார் கலந்து கொண்டு வாக்குகளை திருடாதே, ஓட்டு திருட்டை நிறுத்து என தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். மேலும் புளியம்பட்டி பகுதியில் உள்ள கடை வியாபாரிகள், பொதுமக்கள், பேருந்து பயணிகளை சந்தித்து உங்கள் வாக்கு திருடப்பட்டு உள்ளது உங்கள் வாக்குகள் இருக்கிறதா அவ்வப்போது சரி செய்து கொள்ளுங்கள் என பாஜக அரசுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மேலும் கடைகள், பேருந்துகள் மற்றும் ஆட்டோகளில் ஓட்டு திருட்டை நிறுத்து என் ஓட்டு என் அதிகாரம் என்ற போஸ்டரை ஒட்டி பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

