தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
X
தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவர் வெங்கடாசல புரம் அருகில் இயந்திர தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலையை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை தொழிற்சாலைக்கு வெளியே இருந்த கழிவு தீக்குச்சிகளில் ஏற்பட்ட ஒரு ஆய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. மேலும் கழிவு தீக்குச்சியில் எரிந்த தியானது அருகில் இருந்த தொழிற் சாலைக்கு பரவியதை அடுத்து தொழிற்சாலையில் இருந்து கரும் புகை வந்து உள்ளது. மேலும் இந்த தீ விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் சாத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும் மற்றும் சாத்தூர் நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் 3 நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரம் மற்றும் மூலப் பொருட்கள் உள்பட சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் இது சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்து அதிகாலை யில் நடந்ததால் தொழிலாளர்கள் யாரும் தொழிற்சாலையில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
Next Story