தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ..

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ..
X
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ..
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் ராசிபுரம் வி.நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் லட்சுமி வரவேற்றார். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார்.மாவட்டச் செயலாளர் சங்கர் கூட்டம் நோக்கம் குறித்து எடுத்து பேசினார். கூட்டநிறைவில் மாவட்ட துணைச் செயலாளர் வெ.வடிவேல் நன்றி தெரிவித்தார். நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் சில: நிதி மோசடித்திட்டமான புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் , ஒன்றிய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் ஆகியவற்றை நிராகரித்து விட்டு ஆசிரியர்- அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை 01.04.2003 முதல் தொடர்ந்திடல் வேண்டும். மத்திய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை தொடக்கநிலை ஆசிரியருக்கு வழங்கிடல் வேண்டும். பட்டதாரி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகள் வழங்கிடல் வேண்டும் . கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 22.08.2025 ஆம் நாள் நடைபெறும் சென்னை கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது...
Next Story