தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது அமைச்சர் மதிவேந்தன் பேச்சு...

X
Rasipuram King 24x7 |19 Aug 2025 7:50 PM ISTதமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது அமைச்சர் மதிவேந்தன் பேச்சு...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கள் காப்பாளர் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சுதாகர் தலைமை வகித்தார் .. இதில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு சிறந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கடந்த 10 ஆண்டுகால ஆட்சி காலத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணராமல் விட்டு விட்டார்கள் தற்போதைய திராவிட மாடல் அரசு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளுக்கு அதிக அளவிலான நிதிகள் ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட எண்ணற்ற திட்டங்களை அறிவித்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நான் இந்த துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற பின் இதுவரை 120 கோடி ரூபாய் அளவிற்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ மாணவிகளின் கல்வித்தரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பாக செயல்பட்டு முதல்வரின் கையால் விருதுகளை வாங்கியுள்ளோம். பட்டியலென பழங்குடியின பள்ளிகளில் பயின்று சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான ஏற்பாடுகளை முதல்வர் செய்து இருக்கிறார். மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு ஆசிரியர்கள் ஊந்துதலாக இருக்கின்றார்கள் அது இந்த துறை ஆசிரியர்கள் என்று பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உயர்கல்வி பயில்வதற்கு 400 விண்ணப்பங்கள் அளவிற்கு வந்தன அவைகளில் விண்ணப்பங்கள் தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு 130க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெற்று உயர்கல்வி பெயர சென்றுள்ளார்கள். 135 ஆசிரியர்கள் இந்த துறையின் மூலம் பணிநியமனம் புதிதாக செய்யப்பட்டுள்ளார்கள். முதுநிலை ஆசிரியர்கள் 88 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. 40 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை பட்டாதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் அதிக கவனம் எடுத்து முதல்வரிடம் எடுத்துரைத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கூடிய விரைவில் பல்வேறு சங்கங்களை ஒன்றிணைத்து கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இந்த கூட்டத்தில் சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
