அரசு பள்ளியில் மாணவர்களின் கலை திருவிழா!

அரசு பள்ளியில் மாணவர்களின் கலை திருவிழா!
X
குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் கலைத் திருவிழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் கலைத் திருவிழா இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்றது. நடனம், பாடல், இசைக் கருவி இசைத்தல், ஓவியம், சிற்பக்கலை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர். இத்தகைய போட்டிகள் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்க பெரிதும் உதவுகிறது.
Next Story