என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கல்..

X
Rasipuram King 24x7 |19 Aug 2025 8:44 PM ISTஎன்எம்எம்எஸ் தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கல்..
மத்திய அரசு நடத்தும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித்தொகை பெறுவதற்கான என்எம்எம்எஸ் தகுதி தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச புத்தகங்கள் வழங்கும் விழா ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் அண்மையில் நடைபெற்றது. மத்திய அரசு மூலம் நடத்தப்படும் என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அதில் தேர்ச்சி பெற்றால் அவர்கள் தங்களது பிளஸ் டூ படிப்பினை முடிக்கும் வவரையில் 48 மாதங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 48 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக பெற்றுவருகின்றனர். இதற்காக 2025- 26 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள இத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தகுதி தேர்வு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் இ.என்.சுரேந்திரன் தலைமையில் புதுச்சத்திரம் ஒன்றியம் கதிராநல்லூர், அதன் தலைவர் ரொட்டேரியன் இ. என் சுரேந்திரன் தலைமையில் 7 ஜோடி சேட் மேட் புத்தகங்கள் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கதிராநல்லூர் நடுநிலைப்பள்ளியின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கத்தின் இத்திட்ட கொடையாளரும், ராசிபுரம் ரோட்டரி சங்க உறுப்பினரு மான டி.பி வெங்கடாஜலபதி, திட்டச் சேர்மன் கே.எஸ்.கருணாகர பன்னீர் செல்வம், செயலாளர்l எ.மஸ்தான், ரோட்டரி முன்னாள் தலைவர் எம்.முருகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று இதனை மாணவர்களுக்கு வழங்கினர். இதே போல் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆர். புதுப்பாளையம் நடுநிலைப் பள்ளியில் 22 மாணவ மாணவியர்கள், ராசிபுரம் காட்டூர் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 8 மாணவ மாணவியர்களுக்கும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழு செட் புத்தகங்கள், பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி மையத்தைச் சேர்ந்த 9 நடுநிலைப் பள்ளிகளுக்கு 51 செட் புத்தகங்களும், நாமகிரிபேட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார கல்வி மையத்தை சேர்ந்த 17 நடுநிலைப் பள்ளிகளுக்கு 55 புத்தகங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மு.செல்வம் வழிகாட்டுதலில், மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் ரோட்டரி சங்கத்தின் திட்டக் கொடையாளர் டி.பி வெங்கடாஜலபதி இப் புத்தகங்கள் தேவைப்படுவோர் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தை அணுகினால் மேலும் இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
