உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு உரிய நிதி கேட்டு போராட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு உரிய நிதி கேட்டு போராட்டம்
X
உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு உரிய நிதி கேட்டு போராட்டம்
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு உரிய நிதி கேட்டு போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு உரிய நிதி கேட்டு மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு உரிய நிதி கேட்டு ஒரு மணி நேரம் கருப்பு பட்டை அணிந்து அலுவலக வெளிநடப்பு செய்து பணிகள் புறக்கணித்தனர். இப்பராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு உரிய நிதி விடிவிப்பு மண்டபம் பந்தல் மைக் நாற்காலி உணவு முதலே செலவுகளை அரசு நிதி ஒதுக்கிட வேண்டும் முகாம் நடத்த தேவையான கால அவகாசங்கள் ஒதுக்குதல் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வட்டார செயலாளர் எம்.எஸ்.தயாநிதி தலைமை போராட்டம் நடைபெற்றது.
Next Story