மலைக்குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மலைக்குறவன் மற்றும் பழங்குடியினர் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.

மலைக்குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மலைக்குறவன் மற்றும் பழங்குடியினர் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
X
ஜெயங்கொண்டத்தில் மலைக்குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மலைக்குறவன் மற்றும் பழங்குடியினர் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அரியலூர், ஆக.19 - ஜெயங்கொண்டத்தில் மலைக்குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மலைக்குறவன் மற்றும் பழங்குடியினர் வாழ்வுரிமை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மலை குறவன் பழங்குடியினர் வாழ்வுரிமை மாநாடு அதன் பொதுச்செயலாளர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது மாநாட்டில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் கலந்து கொண்டு திமுக ஆட்சியில் மலைகுறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு செய்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பேசினார் இம்மாநாட்டில் மலைக்குறவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தடையின்றி சாதி சான்றிதழ் அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் ஜெயங்கொண்டத்தில் மலைக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் உண்டு உறைவிடப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு பழங்குடியினர் மற்றும் மலைகுறவரின மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் பழங்குடியினர் மீது காரணமில்லாமல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். மாவட்ட வாரியாக பழங்குடியினர் மற்றும் மலைக்குறவர் சமூக சமுதாயப்புரம் அமைத்து பழங்குடியினருக்கு குடியிருப்பு அமைத்து தர வேண்டும் மலைக்குறவர் மற்றும் பழங்குடியினர் குறித்து கணக்கெடுத்து 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருக்கும் பழங்குடியினர் மற்றும் மலைக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும் பழங்குடியினர் மற்றும் மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையினருக்கான கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டில் குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பழங்குடியினர் மலைக்குறவர் இன மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story