பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி

பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி
X
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி போட்டி நடைபெற்றது. 
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி போட்டி நடைபெற்றது.  தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் இயற்பியல் உதவிப் பேராசிரியர் பாலாஜி வினாடி வினா போட்டிகளை நடத்தினார். தலா இரண்டு பங்கேற்பாளர்கள் கொண்ட 16 அணிகளுக்கும் முதற்கட்ட எழுத்துத் தேர்வோடு தொடங்கியது, அதில் இருந்து முதல் ஐந்து அணிகள் மேடையில் நடைபெறும் வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றன.  தி விகாசா பள்ளி முதலிடமும், அழகர் பப்ளிக் பள்ளி 2வது இடமும், ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது இடமும் பிடித்தன. இயற்பியல் துறைத் துணை முதல்வர் எழிலரசி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். முன்னதாக துறைத் தலைவர் லூகாஸ் ரெக்ஸ்செலின் வரவேற்பு உரை நிகழ்த்தினார். நிறைவாக இயற்பியல் உதவிப் பேராசிரியர் டாக்டர் ஷீபா நன்றியுரை வழங்கினார்.
Next Story