எட்டயபுரத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கம்!

X
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி 3-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கான பணியினையும், மாநில நிதி பகிர்வு ஆணைய நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் வடிகால் வசதி அமைக்கும் பணியையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் எட்டையாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மகாராஜன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், பேரூர் கழக துணைச் செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story

