தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் தீ விபத்து

X
தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் சிலுக்கன்பட்டி சந்திப்பில் தேவா அன் கோ மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கான பேர் வேலைசெய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ஆலையில் இருந்து கரும்புகை வெளிவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மற்றும் சிப்காட் தீயனைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைத்தனர். இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில் ஆலையின் பின் புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த கழிவு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பரவி தீப்பிடித்து எரிந்தது என்று தெரிவித்தனர். தீயனைப்பு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
Next Story

