கொரடாச்சேரியில் ரயிலில் அடிபட்டு முதியவர் பலி

X
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த முகமது என்பவர் நேற்று இரவு காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயிலில் சென்றுள்ளார் கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் இறங்குவதற்காக படிக்கட்டு அருகே முஹம்மது நின்று கொண்டிருந்த போது திடீரென படிக்கட்டில் இருந்து ரயிலுக்கு அடியில் விழுந்த முகமது ரயில் சக்கரத்தில் சிக்கி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் முஹம்மதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

