கிருஷ்ணகிரியில் மு.படைவீரர்களுக்கு மானிய தொகை வழங்கபட்டது.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பாக, "முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டத்தின் கீழ், 12 முன்னாள் படைவீரர்களுக்கு 30 சதவிகித வட்டி மானிய தொகை ரூ.54 இலட்சத்து 80 ஆயிரத்து 700 மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .கோபு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் .பிரசன்ன பாலமுருகன், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் .சரவணன், முன்னாள் படைவீரர் நல அலுவலர் .பெருமாள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

