வாரியூர் அரசு பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

வாரியூர் அரசு பள்ளி  மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதற்காக பள்ளி கல்வித்துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அரசாணை (நிலை) எண்: 191, நாள்: 13-08-2025 ஆகும்.   வாரியூர் சைவ வெள்ளாளர் வெளி நின்ற விநாயகர் டிரஸ்ட் சார்பாக வாரியூர் உயர்நிலைப்பள்ளிக்கு இடம் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  இப்பள்ளிக்கு நேற்று19-ம் தேதி  முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் நேரில் சென்று ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி சிறந்த முறையில் படித்து வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென வாழ்த்தி மகிழ்ச்சியினை தெரிவித்து கொண்டார்.
Next Story