காமரின் சர்வதேசப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்

X
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காமரின் சர்வதேச பள்ளியில் 14வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் இன்ஜினியர் லட்சுமணன் தலைமை வகித்தார். அதிக புள்ளிகளை தட்டி சென்ற அணிக்கு பள்ளி துணைத் தாளாளர் ஆகாஷ் இளங்கோ வெற்றிக்கோப்பை பரிசளித்தார்.பின்னர் மாணவ மாணவிகள் தங்களது சிறப்பான கலை திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் பல விதமான கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story

