முதியவர் விஷம் குடித்து தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை
X
சுசீந்திரம்
குமரி மாவட்டம்  சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறையை சேர்ந்தவர் மோகன் (75). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரது மனைவி லெட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால் சண்டை போட்டு விட்டு வெளியே சென்றதாகவும் அவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்து வீட்டில் உள்ளவர்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மோகன் அவரது மகன் சார்லஸ் புதியதாக வீடு கட்டி வரும் வீட்டில் விஷ மருந்து குடித்து இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அவரது மகன் சார்லஸ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story