கொல்லங்கோட்டில் விளையாட்டரங்கம் கலெக்டர் பார்வை

X
குமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட கலிங்கராஜபுரம் மற்றும் கருங்கல் ஆகிய பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலிங்கராஜபுரம் பகுதியில் பந்தடிக்களம் எனும் இடத்தில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, கிள்ளியூர் வட்டாட்சியர் ராஜசேகர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
Next Story

