விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் பிறந்த தின விழா

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் பிறந்த தின விழா
X
6 குழந்தைகளுக்கு மோதிரம்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம் பி 63 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது இதனை ஒட்டி  குமரி மாவட்டம் குழித்துறைஅரசு ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.  இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் அணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் திலீப் சிங் தலைமை வகித்தார். சமூக நல்லிணக்க பேரவை தென் மண்டல செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் தங்க ஈழவளவன்,   விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுரேஷ் குமார்,  குழித்துறை நகர செயலாளர் சுரேஷ்குமார்,  இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் அருள்,  சமூக நல்லிணக்க பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் பத்ம ராஜா,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story