கோவை: மேயர் வார்டில் குப்பை பிரிப்பு விதி அமல்படுத்தலில் கலகம் !

X
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மக்கும் – மக்காத குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும்; மீறினால் நோட்டீஸ், தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார். ஆனால், கடந்த 16ஆம் தேதி மேயர் ரங்கநாயகத்தின் 28ஆம் வார்டில் சிலர் குப்பைகளை பிரிக்காமல் கொடுத்ததை தூய்மை பணியாளர்கள் சுட்டிக்காட்டிய போது, அப்பகுதி மக்கள் அவர்களுடன் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேயரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர் நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆணையாளர் அபராதம் வசூல் செய்யும்போது, மேயர் வார்டிலேயே விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாநகராட்சி ஊழியர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
Next Story

