காங்கிரஸ் சொத்துக்கள் சீரமைப்பு – தங்கபாலு விளக்கம் !

காங்கிரஸ் சொத்துக்கள் சீரமைப்பு – தங்கபாலு விளக்கம் !
X
2026 தேர்தலில் திமுக–காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் – கே.வி. தங்கபாலு பேச்சு.
கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் கே.வி. தங்கபாலு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சொத்துக்களை ஒருங்கிணைத்து சீரமைக்கும் பணிகள் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். முன்பைவிட தற்போது காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாகவும், அவற்றை கட்சியின் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் வணிக ரீதியாகவும் பயன்படுத்த உள்ளதாகவும் கூறினார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பில் அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டி வருவதாகவும், கிராமம்தோறும் கட்சி புத்துணர்ச்சி பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு தமிழகத்திற்கு சிறப்பானது எதுவும் செய்யவில்லை என்றாலும், தமிழக அரசின் சாதனைகளை பாராட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த தேர்தலிலும் திமுக–காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். உட்கட்சி பிரச்சினைகள் இனி ஒன்றிணைந்து சமாளிக்கப்படும் என்றும், விஜயுடன் ரகசிய கூட்டணி குறித்த தகவல் அவர்களுக்கு வரவில்லை என்றும் விளக்கம் அளித்தார். அதிமுக–பாஜக கூட்டணி தமிழகத்தில் நிலைக்காது என்றும், எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் இணைந்த நாளே அதிமுக பலவீனமடைந்துவிட்டதாகவும் அவர் சாடினார். ஜனநாயகத்தை காக்க ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் முயற்சிக்கு பல்வேறு தலைவர்கள் ஆதரவு தருவதாகவும் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
Next Story