கோவை தூய்மை பணியாளர்கள் நலன் ஆய்வு கூட்டம் !
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிக அடையாள அட்டையும், சம்பளமும் கோவையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒப்பந்த பணியாளர்களின் ஊதிய உயர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதையும், மாதம் ஒருநாள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்த முதலமைச்சரிடம் கோருவதாகவும் கூறினார். பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதை தவிர்க்க பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், இடமாற்றங்கள் பழிவாங்கும் நோக்கில் நடைபெறாதவாறு கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
Next Story



