கோவை மாவட்டத்தில் மைக்ரோ பைனான்ஸ் மோசடி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், மைக்ரோ பைனான்ஸ் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சைபர் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் சரவணன் பொதுமக்களிடம் பேசுகையில், பொய்யான கடன் தள்ளுபடி பிரச்சாரங்கள், OTP மோசடிகள், QR குறியீட்டு மோசடிகள், போலி KYC அழைப்புகள் மற்றும் அடையாள திருட்டு போன்ற அபாயங்களை எச்சரித்தார். மேலும் OTP, கடவுச்சொல், KYC விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம் என்றும், மோசடி ஏற்பட்டால் 1930 என்ற ஹெல்ப்லைன் எண் அல்லது cybercrime.gov.in-ல் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சி, கிராமப்புற மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களிடையே நிதி விழிப்புணர்வை உயர்த்தி, நிதி சேவைகள் மூலம் அறிவார்ந்த முடிவுகளை எடுக்க ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டது. உஜ்ஜீவன் சிறுநீதி வங்கி தலைமையில், மாவட்டத்தின் அனைத்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.
Next Story



