ராமநாதபுரம் கோவில் திருவிழா நடைபெற்றது

ராமநாதபுரம் கோவில் திருவிழா நடைபெற்றது
X
ஆட்டம் பாட்டத்துடன் முளைப்பாரி திருவிழா, இலந்தை முள் படுக்கையில் பூசாரி அருள் வாக்கு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பாம்புல் நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கரியமல்லம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிறைவு நாளான இன்று மாலை 501 முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. முளைப்பாரியின் முன்பு பெண்கள் கும்மி அடித்து முளைப்பாரி தாரை தப்பட்டை மற்றும் மேள தாளங்களுடன், ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து ஊரின் கண்மாயில் கரைக்கப்பட்டது. பின்னர் இலந்தை முள் படுக்கையில் படுத்து பூசாரி அருள்வாக்கு கூறினார். இதை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
Next Story