காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த வருவாய்த்துறையினர்

X
Komarapalayam King 24x7 |20 Aug 2025 1:37 PM ISTகுமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சார் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கன அடி நீர் தண்ணீர் வெளியேற்றப்படலாம். இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை மிக விரைவில் எட்ட கூடும் என கருதி, தற்பொழுது காவிரி ஆற்றில் சுமார் 50 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட கூடும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளை திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கீத் குமார் ஜெயன் நேரில் ஆய்வு செய்தார். வெள்ளப்பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களை தங்க வைக்க முகாம்கள் தயாராக உள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்ட பின்னர், நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திக் ராஜன் வட்டாட்சியர் சிவகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம், அறிவுறுத்தபட்டது. இதில், காவிரியில் அதிக தண்ணீர் வந்து கொண்டுள்ளது.,கரையோர பொதுமக்கள், அரசு சார்பில் ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட முகாம்களில் பாதுகாப்பாக தங்க வேண்டும். பொது மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இங்கு போதுமான உணவு வாதி, மருத்துவ வசதி செய்து தர சார் ஆட்சியர் கூறினார்.
Next Story
