முதியோர் இல்லத்திலிருந்து மூதாட்டி மாயம்

முதியோர் இல்லத்திலிருந்து மூதாட்டி மாயம்
X
குமாரபாளையம் முதியோர் இல்லத்திலிருந்து மூதாட்டி மாயமானார்.
குமாரபாளையம் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் இந்திராணி, 65, என்பவர் இருந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் காலை 10:30மணியளவில், அருகில் உள்ளவர்களிடம் , மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் இதுவரை வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மையத்தின் அமைப்பாளர் குமார், இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், காணாமல் போன மூதாட்டியை தேடி வருகின்றனர்.
Next Story