கைத்தறி ரகத்தை விசைத்தறியில் ஓட்டிய நபர் கைது

X
Komarapalayam King 24x7 |20 Aug 2025 1:49 PM ISTகுமாரபாளையத்தில் கைத்தறி ரகத்தை விசைத்தறியில் ஓட்டிய நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே ஓட்டன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 42. விசைத்தறி தொழில். இவரது கூடத்தில் கைத்தறி ரகத்தை, விசைத்தறியில் ஓட்டி வருவதாக, கைத்தறி ரக ஒதுக்கீடு சட்ட உதவி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், உதவி அமலாக்க அலுவலர் விஜயராணி, நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கைத்தறி ரகமான, பார்டர் மற்றும் முந்தியுடன் கூடிய கிரே அங்கவஸ்திரம், விசைத்தறியில் சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து வருவது கண்டறியப்பட்டது. சட்டத்தை மீறி செயல்பட்ட விசைத்தறி பட்டறை உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி, உதவி அமலாக்க அலுவலர் விஜயராணி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
Next Story
