அரியலூர் சிஐடியு மாவட்ட செயலாளர், துரைசாமி இல்ல திருமண விழா மணமக்களை வாழ்த்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

அரியலூர் சிஐடியு மாவட்ட செயலாளர்,  துரைசாமி இல்ல திருமண விழா மணமக்களை வாழ்த்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்
X
அரியலூர் சிஐடியு மாவட்ட செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான துரைசாமி இல்ல திருமண விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அரியலூர், ஆக.20- அரியலூர் சிஐடியு மாவட்ட செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான பி.துரைசாமி, சித்ராதேவி தம்பதியரின் இளைய மகன் துரை.ஸ்டாலினுக்கும் (எம்.எஸ்.சி) அரியலூர் ஜெ.ஜெ. நகரை சார்ந்த வரதன் (லேட்) நலமுடன் விஜயா தம்பதியரின் மகள் வ.கனிமொழிக்கும் (பி.எஸ்சி., டிஎல்எல்.,) அரியலூர் எஸ்டி மேரி திருமண மஹால் திருமண மண்டபத்தில் புதன்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் அவர்கள் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.அருணன் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினரும், திருச்சி பதிப்பு தீக்கதிர் பொறுப்பாளருமான ஐ.வி .நாகராஜன், மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வி.மேரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், எம்.வெங்கடாசலம், வி.பரமசிவம், டி.அம்பிகா, ஏ.கந்தசாமி மற்றும் கட்சித் தோழர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு துறைச் சார்ந்த அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டு  மணமக்கள் துரை.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் கே.குணா அருணன் (பி.இ.,), துரை.ஜோதிபாசு (கேம்ப் சிங்கப்பூர்), துர்கா ஜோதிபாசு, குட்டீஸ்கள் ஜோ.ரௌத்திரன், அ.லெனின் பாரதி குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர்கள் உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சி ஐ டி யு மாவட்ட செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயற்குழு உறுப்பினரும் மணமகனின் தந்தையுமான பி.துரைசாமி நன்றி கூறினார்.
Next Story