பி.ஏ.பி.வாய்க்கால் கரையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

X
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் (பி.ஏ.பி.) மூலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. பி.ஏ.பி. பிரதான கால்வாய், 126 கிலோ மீட்டர் பயணித்து காங்கேயம், வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை கால்வாய் பகுதி வழியாக கடைமடைக்கு செல்கிறது. இந்த நிலையில் காங்கேயம், வெள்ளகோவில் பி.ஏ.பி. கிளை கால்வாயின் இரண்டு கரையோரங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. அளவுக்கு அதிகமாக கொட்டப்பட்டு உள்ளதால் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. தண்ணீர் திறந்துவிடும் போது, தண்ணீருடன் குப்பைகளும் கலந்து தண்ணீரை மாசுப்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் விவசாய நிலங்களுக்கும் குப்பைகள் பரவும். குறிப்பாக வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
Next Story

