பரமத்தி வேலூரில் பேக்கரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு.

X
Paramathi Velur King 24x7 |20 Aug 2025 6:05 PM ISTபரமத்தி வேலூரில் பேக்கரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு.
பரமத்தி வேலூர், ஆக. 20: பரமத்தி வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க் கிழமை ஆய்வு மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தங் கவிக்னேஷ் உத்தரவின்பேரில் பரமத்தி வேலூர் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி, பரமத்தி வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அடுமனை (பேக்கரி) கடைகளில் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்த உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அலுவலர்கள் மொத்தம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். சந்தேகத்திற்கு இடமான ஆறு வகையான உணவுப் பொருள்களின் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும் முறுக்கு, மிக்சர், சிப்ஸ் நொறுக்குத் தீனிகளில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக் கூடாது அறிவுறுத்தினர்.
Next Story
