பசுபதிபாளையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் படுகாயம்.
பசுபதிபாளையம் அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். பெண் படுகாயம். கரூர் வடக்கு காந்திகிராமம் அழகப்பா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி நித்மா வயது 39. இவர் ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு 8:45 மணி அளவில் பசுபதிபாளையத்திலிருந்து ராமானுர் செல்லும் சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் பஸ் பாடி நிறுவனம் அருகே வந்தபோது பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்த பிரபாகரன் வயது 28 என்பவர் ஓட்டி வந்த மற்றொரு டூவீலர் நித்மா ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த நித்மாவை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து ஏற்படுத்திய பிரபாகரன் மீது பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story




