அங்கராயநல்லூர் ஊராட்சி விவசாயப் பெருமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.

X
அரியலூர், ஆக.20- ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தோட்ட கலைத்துறை சார்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நாளை 21/08/2025 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் உத்திரக்குடி சேவை மைய அலுவலகத்திற்கு வருகை தர உள்ளனர். அது சமயம் விவசாய நண்பர்கள் தங்களது விலை நிலத்தில் உள்ள மண்வளத்தை பரிசோதிக்க ஒரு கிலோ மதிப்புள்ள அளவு மண்ணை எடுத்து வந்து அதனை பரிசோதித்து நிறைகுறைகளை தெரிந்து கொண்டு உங்கள் மண்ணில் என்ன பயிர் சிறப்பாக விளையும் என்பதை தெரிந்துகொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். மண் பரிசோதனைக்கு கட்டணம் வெறும் 30 ரூபாய் மட்டுமே.இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் தோட்டம் மற்றும் வயலில் உள்ள மண்ணை பரிசோதித்து செழுமையான விவசாயம் செய்திட அன்போடு கேட்டுக்கொள்கிறோம்...
Next Story

