நாளாந்தர அரசியல்வாதியை போல செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - மன்னிப்பு கேட்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி

நாளாந்தர அரசியல்வாதியை போல செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - மன்னிப்பு கேட்க வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி
X
நாளாந்தர அரசியல்வாதியை போல செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரியலூர், ஆக. 20- நாளாந்தர அரசியல்வாதியை போல செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - மன்னிப்பு கேட்க வேண்டும் - சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழன் என்பதை விட அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளார் அவர் தமிழராய் இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்பிகளும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பிரச்சாரம் எழுப்பப்பட்டுள்ளது அவர் தமிழர் என்பதை விட ஆர்எஸ்எஸ் காரர் என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன் எனவே ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் இன் பிரச்சாரராக உள்ள சிபி ராதா ராதாகிருஷ்ணனை ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை இந்திய கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு இந்திய கூட்டணியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எம்பிக்களும் ஆதரவு அளிப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் இந்திய கூட்டணி சார்பில் குடியரசு துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுதர்சன் ரெட்டி ஆந்திராவில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார் எனவே ஆந்திராவில் உள்ள அனைத்து எம்பிக்களும் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவளிக்க வேண்டும் என கூறினால் பாஜக கூட்டணியினர் ஏற்றுக்கொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார் எனவே தமிழரை ஆதரிக்க வேண்டும் என்ற பிரச்சாரம் எந்த விதத்திலும் அழுத்தம் இல்லாதது என கூறினார் இன்று நாடாளுமன்றத்தில் 30 நாட்களுக்கு மேல் சிறை படுத்தப்பட்டுள்ள முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது குறித்த கேள்விக்கு பாஜக எதிர் கட்சிகளை ஒடுக்குவது மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை சட்டத்தின் மூலம் ஒடுக்குவது கைது செய்வது சித்திரவதை செய்வது ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவது என தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறார்கள் தற்போது எதிர்க்கட்சி முதல்வர்கள் அமைச்சர்கள் ஒடுக்குவதற்கு இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுவது கண்டிக்கத்தக்கது இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்பார்கள் என கூறினார்.எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டும் வகையில் பேசியது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆம்புலன்ஸ் மீது கோபமா அல்லது வேறு யாரு மீது உள்ள கோபத்தை ஆம்புலன்ஸ் டிரைவர் மீது காண்பித்துள்ளார்.உலகம் முழுவதுமே ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும் என்பது நியதி எடப்பாடி பழனிச்சாமி பேசியதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஆம்புலன்ஸ் டிரைவர் நோயாளியாக போக வேண்டிய நிலை ஏற்படும் என பேசியது ஒரு நாளாந்தர அரசியல்வாதியை போல பேசியது கண்டனத்திற்க்கு உரியது. ஒரு முன்னாள் முதல்வர் இப்படி பேசி இருப்பது வன்மையான கண்டத்திற்க்கு உரியது, இதற்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
Next Story