மார்த்தாண்டம் : ஆட்டோக்கள் பறிமுதல்

X
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆட்டோக்களை நிறுத்தி சவாரி எடுப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உடன் விபத்துகளும் நடக்கிறது என தெரியவந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்கள், போலீசார் ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆட்டோக்களை மேம்பாலத்தில் நிறுத்தக்கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டது. சில நாள்கள் ஆட்டோக்களை மேம்பாலத்தில் விடாமலும் ஆட்டோ டிரைவர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள். ஆனால் சமீப காலமாக சில நாட்களாக அதிகாலை முதலே ஆட்டோக்கள் மேம்பாலத்தில் நிறுத்தப்படுகிறது . இதனைத் தொடர்ந்து எஸ் பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவம் அறிவுரையின் பேரில், மார்த்தாண்டம் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். மேம்பாலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஆட்டோக்களை இன்று பறிமுதல் செய்து அபராதம் விதித்தனார்.
Next Story

