சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் அனுக்கூர் சின்ன ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி
Environmentalist foundation of india என்ற தொண்டு நிறுவனத்தின் (NGO) சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் அனுக்கூர் சின்ன ஏரியில் வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மற்றும் சின்ன ஏரி தூர்வாரி கரை பலப்படுத்தும்
பெரம்பலூர் மாவட்டம் சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் அனுக்கூர் சின்ன ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனுக்கூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனுக்கூர் சின்ன ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இன்று (20.08.2025) தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பராமரிப்பில் உள்ள அனுக்கூர் சின்ன ஏரியின் பரப்பளவு 5.50 ஹெக்டேர் ஆகும். இந்த ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் மண்டி, மண் மேடிட்டு தூர்ந்து உள்ளதால் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாய பெருமக்கள் ஏரியில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றி தருமாறு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனிகவனம் செலுத்தி, சமூக பணியில் ஈடுபாடு கொண்டவர்களிடம் இப்பணி குறித்து தெரிவித்ததன் அடிப்படையில், Environmentalist foundation of india என்ற தொண்டு நிறுவனத்தின் (NGO) சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பில் அனுக்கூர் சின்ன ஏரியில் வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மற்றும் சின்ன ஏரி தூர்வாரி கரை பலப்படுத்தும் தருவதாக ஒப்புதல் பெறப்பட்டு தூர்வாரும் பணியினை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலம் அனுக்கூர் சின்ன ஏரியில் மழைக்காலங்களில் வரத்து வாய்க்கால்கள் மூலமாக மழைநீர் முழுவதுமாக சேமிக்கப்படும். ஏரி அருகே உள்ள 60 ஹெக்டேர் பரப்பளவில், உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதற்கான வழிவகை ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி ஷாஜிதா, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, வட்டாட்சியர் துரைராஜ், உதவி பொறியாளர் சதீஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story




