மருதுபாண்டியர் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது இந்நிகழ்ச்சியில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் துவக்கி வைத்து பேசினார். மருதுபாண்டியர் கல்லூரி IQAC இயக்குநர் ல.மதுகிருத்திகா, உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் இரா.இராஜகுமார், உயிர் வேதியியல் துறைத்தலைவர் வே.இராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் நடுவர் நீதிபதி சோழவேந்தன் கலந்து கொண்டு பேசுகையில், "போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களின் உடல், மனம், குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையை பாதிக்கும்" என்றார். சிறப்பு விருந்தினர் செயலர், சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி பாரதி கலந்து கொண்டு போதைப்பொருள்கள் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துரைத்தார். முன்னதாக நாட்டு, நலப்பணித்திட்ட மாணவி வி.ஜெரிலின் வரவேற்றார்,. நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் ஏ.ஆதித்யன் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் து.பூங்குயில், ச.நடராசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story

