ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மின் ஊழியர் ஆர்ப்பாட்டம் 

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மின் ஊழியர் ஆர்ப்பாட்டம் 
X
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், கடலூர் மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கை, மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடியாக துவக்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை மாலை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், திட்டச் செயலாளர் பி.காணிக்கைராஜ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். நிறைவாக, திட்டப் பொருளாளர் கே.மணிவண்ணன் நன்றி கூறினார்.  சங்க நிர்வாகிகள் கலைச்செல்வன், வளவராசு, ரவி, அறிவழகன், சந்தன முத்து, ஓய்வு பெற்றோர் நல அமைப்பு ராஜப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
Next Story