சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

X
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேதுபாவாசத்திரம் அருகே உள்ள குண்டாமரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி பிரியா (30), இவரது கனவர் சுபவைரவன்(33) வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். மனைவி மற்றும் குழந்தையை திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்திருந்தார். இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து ஒருவாரத்திற்கு முன்பு ஊர் திரும்பிய சுபவைரவனுக்கும், லெட்சுமி பிரியாவிற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை கொண்டு வந்து குண்டாமரைக்காட்டில் உள்ள அவரது தாயார் வீட்டில் திங்கள்கிழமை விட்டுச் சென்ற நிலையில், மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை, லெட்சுமி பிரியாவை வீட்டில் உள்ளவர்கள் காணாமல் தேடியபோது, வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு ஏறும் ஏணியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர் .
Next Story

