வானூர் அரசு கல்லூரியில் பயிற்சி பட்டறை நடைபெற்றது

வானூர் அரசு கல்லூரியில் பயிற்சி பட்டறை நடைபெற்றது
X
கல்லூரி முதல்வர் தலைமையில் நடைபெற்றது
வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பாலின உணர்திறன் பயிற்சி பட்டறை நடந்தது.இக்கல்லுாரியில் செயல்படும் பாலின உணர்திறன் குழு மற்றும் புதுச்சேரி இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமை அமைப்பு சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருநாள் பாலின உணர்திறன் பயிற்சி பட்டறை நடந்தது.கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை, கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பாலின உணர்திறன் பாகுபாட்டிற்கான காரணங்கள், பாலின சமத்துவத்தை அடைய கல்வியின் மூலம் பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.பாலின உணர்திறன் குழு ஒருங்கிணைப்பாளர் காந்திமதி அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை வி.ஐ.டி., பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பிரான்சிஸ் குழந்தைராஜ், பாலின பாகுபாட்டின் வரலாறு, நடைமுறை சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தார்.
Next Story