தேன்கனிகோட்டை: டூவீலர் திருட்டு வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் டூவீலர்கள் திருட்டு போனது இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குகளில் ஏற்கனவே, நவீன், நகீம், ஹரிஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் தேன்கனிக்கோட்டை அருகேஉள்ள வன்னியபுரத்தை கட்டிட மேஸ்திரி சக்திவேல்(38) இவர் தலைமறைவாக இருந்தார். அவரை தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். டூவீலர்களை திருடி பெங்களூருவில் விற்றது தெரியவந்தது.
Next Story

